Tamilசெய்திகள்

பழங்கால நாகரிகங்கள் கொண்ட மிகச் சில நாடுகளில் நாமும் ஒன்று – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சென்னை ஐஐடி மாணவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது “உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.

நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும், நேர்மையாகவும் தொடர்புகொண்டால், மற்ற நாடுகளும் மற்ற மக்களும் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.

மேலும், “உலகம் முழுவதும் உள்ள பல மக்கள் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபு குறித்துப் பெருமை கொள்கிறார்கள். நாம் பெருமை கொள்ளாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. நவீன காலத்தின் முக்கிய தேசங்களாக நிலைத்து நிற்கும் பழங்கால நாகரிகங்கள் உண்மையில் மிகச் சிலவே உள்ளன. அவற்றில் நாமும் ஒன்று” என்றார்.