Tamilசெய்திகள்

சீனாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் உலக இந்தி தினம் கொண்டாட்டம்

உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10-தேதி கொண்டாடப்படுகிறது. சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உலக இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இந்திய துணைத்தூதர் பிரதிக் மாத்தூர், இந்தி மொழி எல்லைகளைக் கடந்து நம்மை இணைக்கிறது என கூறினார். அவர் பிரதமர் மோடியின் செய்தியையும் வாசித்தார்.