மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
Dravidian Model: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்!
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அறிக்கையாக அமைந்துவிட்டது!
தமிழ்நாடு ‘நம்பர் 1’ என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி அவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால் அவர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும். ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் ஒன்றிய அரசு அளித்த தரவுகள்தான்.
2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் #வெல்வோம்_ஒன்றாக! என்று கூறியுள்ளார்.
