Tamilசெய்திகள்

73 வது பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின் மெரினா கடற்கரையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 105 ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.கஸ்டாலினுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதன்பின், அண்ணா அறிவாலயம் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.