ஜேட்டா, துபாய்க்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் ஏர் இந்தியா
மத்திய கிழக்கு பகுதி மோதல் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வர ஜெட்டா மற்றும் துபாய்க்கு இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.
இன்று மும்பையில் இருந்து ஜெட்டா 350 இருக்கைள் கொண்ட போயிங் 777 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. 300 இருக்கைகள் கொண்ட போயில் 787-9 விமானம் டெல்லியில் இருந்து துபாய்க்கு இன்றிரவு புறப்பட்டுச் செல்லும். 250 இருக்கைகள் கொண்ட போயிங் 787-8 விமானம் மும்பையில் இரந்து துபாய்க்கு நாளை அதிகாலை புறப்பட்டுச் செல்லும்.
நாளை இந்த விமானங்கள் மும்பை மற்றும் டெல்லி வந்தடையும். ஓமன், சவுதி அரேபியா, எகிப்து வான்வெளியாக செல்ல இருக்கிறது.
