Tamilசெய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி – டாஸ்மாக்கில் மது வாங்க புதிய கட்டுப்பாடு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தாஇ விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருவதோடு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளுக்கான கட்டுப்பாடுகளும், விலை பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது வாங்குபவர்களுக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நபருக்கு 4.5 லிட்டர் வரை மதுபான விற்பனைக்கும், 7.8 லிட்டர் பீர் விற்பனைக்கும், அதிகபட்சமாக 9 லிட்டர் ஒயின் விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானத்தை 6 முழு பாட்டில்கள் (750 மிலி) வரையோ, அல்லது 12 அரை பாட்டில்கள் (375) அல்லது 24 கால் பாட்டில்கள் (180) வரையோ வாங்கலாம். அதேபோல், ஒரு நபருக்கு 12 பீர் பாடில்கள் (650 மிலி) மட்டுமே விற்கப்படும்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களின்படி வரம்பைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மேற்பார்வையாளர்கலுக்கும் விற்பனையாளர்களுக்கும் மாவட்ட மேலாளர்கள் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். விற்பனையானது ஒரு முழுமையான கணினி மயமாக்கப்பட்ட அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும், ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய கட்டணங்கள் இருந்தால், அது குறித்துக் கண்டறியப்பட்டு, விசாரணை மற்றும் துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.