Tamilசெய்திகள்

விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை, பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய், தனக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த அனுமதி மறுப்பே திமுக த.வெ.க-வை பார்த்து எந்த அளவுக்கு பயப்படுகிறது என்பதை உணர்த்துகிறது, என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திற்கோ, காவல்துறைக்கோ கடிதம் அளிக்க வேண்டாம். 48 மணி நேரத்திற்கு முன்னர் இணைய வழியாக விண்ணப்பித்தால் போதுமானது.

முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது. தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

எங்கு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையமே தீர்மானிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.