Tamilசெய்திகள்

தருமபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் கே.என்.சேகர், செஞ்சியில் கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாமக இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ளார். இதில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

பெரம்பூரில் கவிஞர் ம.திலகபாமா, விருத்தாசலத்தில் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், சேலம் மேற்கில் மு.கார்த்தி, பென்னாகரத்தில் பாடி வெ. செல்வம், போளூரில் சி.ஆர். பாஸ்கரன், திருப்போரூரில் வழக்கறிஞர் கே.பாலு, ஜெயங்கொண்டத்தில் க. வைத்தி, சேலம் வடக்கில் எஸ். சதாசிவம், விக்கிரவாண்டியில் சி. சிவக்குமார், சோளிங்கரில் வழக்கறிஞர் க. சரவணன், மயிலாடுதுறையில் சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, உத்திரமேரூரில் பெ. மகேஷ்குமார், ரிஷிவந்தியத்தில் அ.ப. செழியன், காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் மருத்துவர் அன்பு சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.