Tamilசெய்திகள்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்!

ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இன்று (ஏப்.22) மதியம் 1.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் – 06072) நாளை அதிகாலை 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.