Tamilசெய்திகள்

வாக்களிக்க ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களை காட்டலாம் – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இசிஐநெட் இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை வைத்தோ புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை ஒ.டி.பி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.

அவற்றி விபரம்:

1. ஆதார் அட்டை

2. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகங்கள்

3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை.

4. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.

5. ஓட்டுநர் உரிமம்

6. பான் கார்டு

7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அட்டை.

8. பாஸ்போர்ட்

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.

11. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அல்லது சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

12. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டை.

ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.