குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க!
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மாநிலத்திலுள்ள அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட மொத்தம் 15 மாநகராட்சிகளையும் பாஜக முழுமையாகக் கைப்பற்றிப் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாநகராட்சிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளிலும் பாஜகவின் ஆதிக்கம் தொடரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிற்கு ஒரு பெரும் பலமாகப் பார்க்கப்படுவதுடன், அக்கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
