ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று தொடங்கியது
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று முதல் முறைப்படி தொடங்கப்பட்டது.
அதிவேகப் பயண வசதி கொண்ட இந்த ரயிலின் வருகையால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு இடையிலான பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில் சேவை, உள்ளூர் மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
