ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய பிரத்யேக இணையதளம் – சி.பி.எஸ்.இ அறிவிப்பு
சி.பி.எஸ்.இ (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு (Revaluation) தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் வகையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய பிரத்யேக இணையதளம் ஒன்று செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘Post-Result Activities portal’ என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ அமைப்பால் வழங்கப்பட்டுள்ள 1800 11 8004 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் (Toll-Free Number) தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
