Tamilசெய்திகள்

தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்! – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள ‘முரசு’ புயல் எச்சரிக்கை காரணமாக, திருப்பதி திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சித்தூர், திருப்பதி மாவட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

100 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மிகக் கனமழை அச்சுறுத்தல் காரணமாகத் திருமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே புயல் கரையைக் கடக்கும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மழை வெள்ளப் பெருக்கு காரணமாகத் திருமலை மலைப்பாதை மற்றும் பாதயாத்திரை வழிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.