Tamilசெய்திகள்

தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து தொடங்கிய ‘ரோமி’ செயலி

தனியார் பயணச் சீட்டு முன்பதிவுச் செயலிகள் வசூலிக்கும் அதிகப்படியான கமிஷன் கட்டணங்களைத் தவிர்த்துப் பயணிகளுக்கான பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ‘ரோமி’ (Roamie) எனும் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம் (roamie.co.in) மற்றும் செயலியைத் தொடங்கியுள்ளனர்.

இடைத்தரகர்கள் இன்றி பயணிகள் நேரடியாகப் பேருந்து உரிமையாளர்களிடம் இருந்தே குறைந்த கட்டணத்தில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் இந்த புதிய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களும், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் இந்தத் தளத்தில் ஏற்கனவே தங்களைப் பதிவு செய்துள்ளன.

வெளிப்படையான கட்டண முறை மற்றும் கூடுதல் சலுகைகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ‘ரோமி’ செயலி மூலம் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துப் பயணக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் என்பதால் பயணிகள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.