Tamilசெய்திகள்

டிசம்பர் 1 ஆம் தேதி முதல கொடைக்கானலில் பெரிய வாகனங்களுக்குத் தடை

கொடைக்கானல் மலைச்சாலையில் பெரிய வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் தடை அமலுக்கு வருவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வால்வோ உள்ளிட்ட நீளமான பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்களுக்கு திண்டுக்கல், அய்யம்பாளையம், தாண்டிக்குடி, பாச்சலூர், பழனி, பெரியகுளம் உள்ளிட்ட வழித்தடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில், 12 மீட்டருக்குக் குறைவான நீளமுள்ள வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.