Tamilசினிமா

பிரதமர் மோடி மற்றும் விவேகானந்தர் வாழ்க்கை ஒரே திரைப்படமாக உருவாகிறது

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை கதை ஏற்கனவே பி.எம். நரேந்திர மோடி என்ற பெயரில் சினிமா படமாக வெளிவந்தது. இதில் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்து இருந்தார். தற்போது நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து இன்னொரு இந்தி படமும் தயாராகிறது.

இந்த படத்துக்கு ஏக் அவுர் நரேன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை பிரபல வங்க மொழி இயக்குனர் மிலன் பவுமிக் டைரக்டு செய்கிறார். இவர் டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் மரணம் அடைந்த நிர்பயா கதையை படமாக்கி பிரபலமானவர்.

நரேந்திர மோடி படத்துக்கான திரைக்கதையை எழுதி தற்போது படப்பிடிப்புக்கு அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தில் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் டி.வி. நடிகர் கஜேந்திர சவுகான் நடிக்கிறார். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்து பிரபலமானவர்.

நரேந்திர மோடி வாழ்க்கை படம் இரண்டு பாகமாக உருவாகும் என்றும், இதே படத்தில் விவேகானந்தர் வாழ்க்கை கதையும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.