தன்வந்திரி பீடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர்மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி தமிழ்புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கீழ்கண்ட ஐந்துஹோமங்கள் நடைபெறவுள்ளது. 1. நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்திஹோமம். எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம். ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம். நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம். வாழவில்வளம் பெற குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது. யாகங்களை முன்னிட்டு காலை கோ பூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு பூஜையும்நடைபெறவுள்ளது. யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும்சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத்தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல்,
Read More