Tamil

Tamilசெய்திகள்

தேசிய நலனை விட, குடும்ப நலனுக்கு தான் எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கிறது – பிரதமர் மோடி காட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று சென்றாா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,880 கோடி மதிப்பீட்டிலான 44 நலத் திட்டங்களை பிரதமா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். பிரதமா் தொடங்கி வைத்த திட்டங்களில் பெரும்பாலானாவை கிராமப்புற மேம்பாடு சாா்ந்தவையாகும். இதில் 130 குடிநீா் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிண்ட்ரா பகுதியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசுக் கலை கல்லூரி ஆகியவை அடங்கும். ராம் நகரில் உள்ள காவல்துறை வளாகத்தில் ஒரு விடுதியையும் பிரதமா் மோடி திறந்து வைத்தாா். நகா்ப்புற வளா்ச்சித் திட்டமாக, ரெயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையம் இணைந்து சாஸ்திரி மற்றும் சாம்னே படித்துறையில் மேற்கொண்ட மறுசீரமைப்புத் திட்டங்களை அவா் தொடங்கி வைத்தார். வாரணாசியில் புதிதாக 15 துணை மின்நிலையங்கள், புதிய மின்மாற்றிகள், 1500 கி.மீ. தொலைவுக்கு புதிய மின்பாதை அமைப்பு உள்பட ரூ.2,250 கோடி மதிப்பீட்டிலான 25 திட்டங் களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். வாரணாசி விமான நிலையத்தின் விரிவாக்கமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம், நகரில் 3 புதிய மேம்பாலங்கள் மற்றும் பல்வேறு சாலைகளின் விரிவாக்கத் திட்டங்கள், ஷிவ்பூா், உ.பி. கல்லூரி ஆகிய இடங்களில் 2 புதிய விளையாட்டு மைதானங்கள், பள்ளி புனரமைப்புப் பணிகள் ஆகிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். ரோஹனியா பகுதியில் உள்ள மெந்திகஞ்சில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்து பிரதமா் மோடி திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காசி இனி பழங்காலத்தின் சின்னம் மட்டுமல்ல, அது முன்னேற்றத்தின் மாதிரியாக கூடவும் இருக்கிறது. 10 ஆண்டுகளில் வாரணாசி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வளர்ச்சியில் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. வரும் மாதங்களில், அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறைவடையும் போது, வாரணாசிக்குச் செல்வதும், அங்கிருந்து திரும்புவதும் எளிதாகிவிடும். வேலை, வணிகங்களில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் காசி இளைஞர்களுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த பாடுபடுகிறோம். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அதற்கு ஒரு புதிய ஆற்றலை வழங்குவதற்கும் செயல்பட்டு வருகிறோம். தேசத்திற்கு சேவை செய்யும் உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள் இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இது தேசிய நலனுக்காக அல்ல. அவர்களின் குடும்பத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஒருமித்த கவனம் செலுத்துகிறார்கள். சிலர் வாரிசு அரசியலை நம்புகிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக விளையாடுபவர்கள் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Read More
Tamilசெய்திகள்

மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.02 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. முன்னதாக கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் அதே நாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,600 ஐ கடந்துள்ளது. 5,017 பேர் காயமடைந்துள்ளனர். 148 பேர் மாயமாகி உள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடி இன்றைக்கு கட்சியின் பொறுப்பை இழந்துள்ளார். அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பெண்கள் குறித்தும் தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று விமர்சித்து பேசினார். எல்லாமே ஓசி என்று கேலியும் கிண்டலுமாக பேசினார். அதனை தமிழகத்தில் முதன் முதலாக கண்டித்தவன் நான் தான். அமைச்சரான பொன்முடிக்கு அனைத்தும் ஓசி தான். அவருக்குரிய சலுகைகளை மற்றும் உபசரிப்புகளை எல்லாம் அப்போதே குறிப்பிட்டு நான் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் கூட டெல்லி சென்ற பொன்முடி விமானத்தில் ஓசியில்தான் சென்று வந்தார். இதுவும் மக்களின் வரிப்பணம். பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார். எனவே தமிழக மக்கள் படும் பாட்டை முதலமைச்சருக்கு யாராவது விரைவாக எடுத்து தெரிவிக்க வேண்டும். எனவே தான் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை. கடந்த 9-ந்தேதி நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பங்கேற்கவில்லை. காரணம் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி கூறி இருந்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்களை கொண்டு வந்தார்கள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பின்னர் ஒரு கோடி கையெழுத்து என்றார்கள். இதுவெல்லாம் நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது. எனவே தான் இப்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை. பாரதிய ஜனதா மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றினால் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை. அது அவர்களது கட்சி விவகாரம். ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். யாரையும் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தியோ சந்திக்க மாட்டார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
Tamilசெய்திகள்

சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் நீடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி கேசுவலாக பேசி இருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- வேண்டுமென்றே எதுவும் பேச மாட்டோம். பேச்சுவாக்கில் Slip ஆகி இருக்கும். சீனியர் அமைச்சர் குறித்து கருத்து சொல்ற உரிமை எனக்கு கிடையாது. பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Read More
Tamilசெய்திகள்

ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-ந்தேதி முதல் 17ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: தமிழகத்தில் இன்று முதல் 14-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். 15-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Read More
Tamilசெய்திகள்

ரஷியாவின் மே 9 வெற்றி தினம் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்துள்ளது. மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பிற நட்பு நாடுகளுக்கும் அழைப்புக் கடிதம் பறந்துள்ளது. பிரதமர் மோடி கடைசியாக 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசென்னை 360

இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது. முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்ந்து ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் போர்வையில் சுற்றப்பட்ட தாய், மகள் சடலம் கண்டெடுப்பு! – கணவரை காணவில்லை

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.

Read More
Tamilசெய்திகள்

டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ரூ.1000 கோடி முதலீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், டி.சி.எல். டெக்னாலஜீஸ், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற்பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவான்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Read More