இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 260 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.
ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி 50 எடுத்தது. இதன் ஜோடியை முகமது சமி பிரித்தார். அவர் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே – கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.
இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினர். 4 பவுண்டகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.