Tamilவிளையாட்டு

இப்போதுள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சினின் சதங்கள் இரு மடங்காக உயர்ந்திருக்கும் – சானத் ஜெயசூர்யா கருத்து

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது உள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுலகரின் சதங்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர். இதனால் 30 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் சுவிங் ஆவதில்லை. மேலும் பவர்பிளேயில் புதிய விதிமுறை பின்பற்றபடுகிறது. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை அப்போது இருந்திருந்தால் அந்த காலத்தில் சச்சினின் ரன்களும், சதங்களும் இருமடங்காக உயர்ந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.