இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – ரோகித் சர்மா, முகமது ஷமிக்கு ஓய்வு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றிய நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஷிகர் தவானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியிலும் தவான் இடம் பிடித்துள்ளார்.