Tamilசெய்திகள்

ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். பிரமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், 60 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயுஷ்மான் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ரூ. 64,000 கோடி முதலீட்டில் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 35,000 புதிய அவசர கால சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2013- 14ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2021 -22ம் ஆண்டில் அதன் எண்ணிக்கையை 596 -ஆக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 51,000-ல் இருந்து 89,000-மாகவும், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 31,000-ல் இருந்து 60,000-ம் ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.