Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – டெல்லி, கோவா இடையிலான போட்டி டிராவானது

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *