Tamilசெய்திகள்

கடந்த மாதம் திருப்பதியில் உண்டியல் காணிக்கை ரூ.116 கோடி வசூல் – தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது. 7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.