சல்மான் கானை வைத்து புதிய படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘அமரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அமரன் படத்தில் ‘பிஸி’-யாக உள்ள அவர் அடுத்த புதிய படம் குறித்து அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய ஒரு இந்தி படத்தை இயக்குகிறார். இதுபற்றி இணையதளத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:-
புதிய இந்திப் படம் “புராணக் கதை’ அம்சம் கொண்டது. இந்தி நடிகர் சல்மான்கான், தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா உடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி. அபாரமான திறமைகளுடன் கூட்டு சேரும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த படம் வருகிற 2025 ரம்ஜானுக்கு திரைக்கு வரவுள்ளதாகக் கூறினார்.
சல்மான் கான் கூறியதாவது :-
“மிகவும் அற்புதமான ஒரு படத்திற்காக, மிகவும் திறமையான இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் எனது நண்பர் சஜித்நதியத்வாலா உடன் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்த ஒத்துழைப்பு சிறப்பு வாய்ந்தது. உங்கள் அன்புடனும், ஆசீர்வாதத்துடனும் இந்த பயணத்தை எதிர்நோக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
சல்மான்கான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைகிறார். அவருடன் ஏற்கனவே படங்களில் நடித்துள்ளார். இந்த படம் போர்ச்சுக்கல், பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் படமாக்கப்பட உள்ளது. இது ரூ.400 கோடியில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக தயாரிக்கப்பட உள்ளது.