தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? – இன்று முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.