திருமணம் பற்றிய கேள்வி – ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்
காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல மாநிலங்களைக் கடந்த பாதயாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
அக்கட்சியின் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வீடியோவில், கேள்வி கேட்கும் நபர், எந்த தருணத்தில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? அட்டையில் உங்களது திருமணத்தை காண முடியாதா? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் வருமாறு:
சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன். எனது பாட்டியார் இந்திரா தான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் அதுபோன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தன் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது என தெரிவித்துள்ளார்.