நித்யானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸார் சோதனை!
சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் பெங்களூருவை அடுத்த ராமநகர் மாவட்டம் பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியானபீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள 2 மகள்களை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குஜராத் ஐகோர்ட்டில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, நித்யானந்தா மாயமாகி இருந்தார். இந்த நிலையில் குஜராத் போலீசார் நேற்று பிடதியில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும் நித்யானந்தா சாமியார் குறித்து ஆசிரமத்தில் உள்ள அவருடைய சீடர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.