நியூசிலாந்து, இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அந்நாட்டின் அணிக்கு எதிராக நான்கு 20 ஓவர் மற்றும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, டேவிட் மலான், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், ஹாரி புரூக் மற்றும் நியூசிலாந்து அணியில் கேப்டன் டிம் சவுதி, டிவான் கான்வே, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்பட தரமான வீரர்களும் விளையாடுகின்றனர்.