நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி ஜோதி துர்கா இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.