பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன.
சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல் நலம் ஓரளவு குணமடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சாமி செய்தார். தனது உடல்நலம் முன்னேறுவதற்காக படிவழி பாதையில் நடந்து வந்து 600 படிகளில் சூடம் ஏற்றி வழிப்பட்டார்.