Tamilசெய்திகள்

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து குழுவினர் மீது துப்பாக்கி சூடு – 2 போலீஸ்காரர்கள் பலி

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுவினர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

குவெட்டாவின் நவா கில்லி பகுதியில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூட்டில், சொட்டு மருந்து குழுவினருக்கு பாதுகாப்பிற்காக சென்ற 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். போலியோ மருந்து குழுவினர் காயமின்றி தப்பினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் போலியோ சொட்டு மருந்து இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதேபோல் கடந்த காலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களில் இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களால் போலியோ சொட்டு மருந்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் மேற்கத்திய நாடுகளின் சதி என்றும், பாகிஸ்தான் குழந்தைகளுக்கு கருத்தடை செய்யும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் பல்வேறு மத தலைவர்களும், பயங்கரவாத குழுக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.