பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – முதல் முறையாக அறையிறுதிக்கு முன்னேறிய சிலிச்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ருப்லெவ்-இருபதாம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா) மோதினார்கள்.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிலிச் 5-7 , 6-3, 6-4, 3-6, 7-6 (10-2) என்ற செட் கணக்கில் கடும் போராட் டத்துக்கு பிறகு வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் ஏற்கனவே கால்இறுதியில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவை வீழ்த்தி இருந்தார்.
2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிய சிலிச் முதல் முறையாக பிரெஞ்சு ஒபனில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
நள்ளிரவில் நடந்த கால்இறுதியில் 8-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 4-6, 7-6 (7-2) 6-3 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேயை (டென்மார்க்) வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் சிலிச்-கேஸ்பர் ரூட், ரபெல் நடால் (ஸ்பெயின்)-அலெக்ஸ்சாண்டர் கவரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. ஒரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து)-கசட்கினா மோதுகிறார்கள்.
மற்றொரு அரை இறுதியில் கோகோ கவூப் (அமெரிக்கா)-மார்ட்டினா டிரெவிசியன் (இத்தாலி) மோதுகிறார்கள்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடி இன்று நடைபெறும் அரைஇறுதியில் ரோஜர் (நெதர்லாந்து),-மார்சிலோ (சால்வடார்)ஜோடியை எதிர் கொள்கிறது.