பெண்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் – பாடகர் வேல்முருகன் பேட்டி
திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கும் ஸ்ரீ கோகுல் உணவகம், மகளிர் தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு இலவச உணவு வழங்கியது.
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாடகர், நடிகர் வேல்முருகன், “அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் குன்றத்தூர் மேத்தா நகரில், ஸ்ரீ கோகுல் சைவ உணவகம் புது பொலிவுடன், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தில் நான் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு சிறப்பான உணவகத்தை திறந்திருப்பது சிறப்பான விசயம். கோபி சார் துபாயில் வேலை செய்தாலும், இங்கே இப்படி ஒரு உணவகத்தை நடுத்தர மக்களுக்காக திறந்திருக்கிறார். குறைந்த விலையில், வீட்டில் உண்பது போன்ற உணவு வகைகள் இங்கு கிறைக்கிறது. இதை ஒரு தொழிலாக மட்டுமே கோபி சார் பார்க்கவில்லை, வாழ்க்கையில் மிகவும் கஷ்ட்டப்பட்டு முன்னேறியிருப்பதால், எளிய மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தரமான உணவை நியாயமான விலையில் கொடுப்பதற்காகவே, அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு இந்த உணவகத்தை திறந்திருக்கிறார், இதுபோல் பல கிளைகளை அவர் திறக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன். மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று 500 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. இது இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இதில் நான் கலந்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என்றார்.
மகளிர் தின வாழ்த்து தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய், திமுக-ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறாரே? என்பது குறித்த கேள்விக்கு,
”அரசியல் எனக்கு பெருசா வராது. எனவே, அவரது கருத்து பற்றி அரசியல் தலைவர்களிடம் தான் கேட்க வேண்டும். இங்கு நான் பாட்டு பாடி மக்களை மகிழ்விக்க வந்திருக்கிறேன். அதே சமயம், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும், அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். பெண்கள் இல்லை என்றால் நாம் இல்லை. அவர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சாதனை பெண்மணிகளை வாழ்த்துவது சந்தோஷம், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று பதில் அளித்தார்.
தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறதே, என்ற கேள்விக்கு,
”இதுபோன்ற பிரச்சனைகளை அரசாங்கம் தான் தீர்க்க வேண்டும். அவர்களும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறார்கள். எங்காயவது ஒரு சில விசயங்கள் இதுபோல் நடப்பதுண்டு, அது நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் செய்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்.” என்றார்.
இளையராஜா லண்டனில் சிம்பொனி அமைப்பது பற்றி, என்ற கேள்விக்கு,
”இளையராஜா ஐய்யா சிம்பொனி அமைப்பது நமக்கு மட்டும் அல்ல நம் நாட்டுக்கே பெருமை. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அவருடைய இசையை தான் கேட்கிறோம். நட்பு, காதல், சகோதரத்துவம், அம்மா, அன்பு என அனைத்துக்கும் அவரது பாடல்கள் தான். அது தான் நமக்கு உற்சாகம் தருகிறது. நேற்று நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வணங்கி விட்டேன். இன்று இந்த சிறப்பான நாளில் அவரது சிம்பொனி நிகழ்வு நடப்பது நம் அனைவருக்கும் பெருமை.” என்று பதில் அளித்தார்.
இசைக்கலைஞர்கள் தற்கொலை செய்துவிட்டதாக அவ்வபோது தகவல்கள் வெளியாவதும், பிறகு சம்மந்தப்பட்டவர்கள் தரப்பு மறுப்பு தெரிவிப்பதும் அதிகரித்து வருகிறதே, என்பது பற்றிய கேள்விக்கு,
“ஆமாம், இதற்கு முதல் காரணம், மீடியாக்கள் தங்களுக்கு கிடைத்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த தகவல் பற்றி தீவிரமாக விசாரிக்காமல் வெளியிடுவது தான். இதுபோன்ற தகவல்கள் கிடைக்கும் போது, சம்மந்தப்பட்டவர்கள் அல்லது அவர்கள் தொடர்புடையவர்களிடம் விசாரித்து செய்தி போட வேண்டும். குறிப்பாக தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்திருக்கும் சோசியல் மீடியாக்கள் மூலம் தான் இதுபோன்ற தவறான செய்திகள் வெளியாகிறது.” என்று தெரிவித்தார்.
சில உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவது, அதனால் மக்கள் பாதிக்கப்படுவது, தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,
”உணவகங்கள் நடத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை. அதை ஒரு தொழிலாக மட்டுமே அல்லது ஏனோ தானோ என்று நடத்துபவர்களிடம் நீங்கள் சொல்லும் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்த உணவகத்தை பொறுத்தவரை (ஸ்ரீ கோகுல்) அப்படிப்பட்ட குறைபாடுகள் நிச்சயம் வராது. இதை நடத்தும் கோபி சார், கஷ்ட்டப்பட்டு வந்தவர். அதனால் தான், எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான வீட்டு சமையல் போன்ற உணவுகளை நியாயமான விலையில் கொடுப்பதற்காகவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். எனவே, மற்ற உணவகங்கள் எப்படி என்பது எனக்கு தெரியாது, ஆனால், நிச்சயம் ஸ்ரீ கோகுலம் உணவகத்தின் உணவு வகைகள் தரம் மற்றும் சுவையானதாக மட்டும் இன்றி நியாயமான விலையிலும் கிடைக்கும்.” என்று பதில் அளித்தார்.