ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – மும்பை அணியில் ரகானே, பிரித்வி ஷா பங்கேற்பு
2019-2020 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ரஞ்சி கோப்பையில் முக்கியமான அணிகளில் ஒன்றான மும்பை முதல் போட்டியில் பரோடாவை வீழ்த்தியிருந்தது.
2-வது ஆட்டத்தில் பலம் இல்லாத ரெயில்வேஸ் அணியை எதிர்கொண்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
அடுத்த போட்டியில் வரும் 3-ந்தேதி வலிமையான கர்நாடகாவை எதிர்கொள்கிறது. ரெயில்வேஸ் அணிக்கெதிராக படுதோல்வி அடைந்ததால், கர்நாடகா அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட ரகானே, பிரித்வி ஷா சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ரகானே தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே இலங்கை தொடரில் விளையாட செல்வதால் அணியில் இடம் பெறவில்லை.