வைரலாகும் அஜித்தின் பைக் ஓட்டும் வீடியோ
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
இந்த வீடியோவை அஜித்துடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள சுப்ரஜ் வெங்கட் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. வட மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர், நடிகர் அஜித் வெளிநாடுகளில் பைக் ரைடிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.