Tamilசினிமா

இந்தியா என்ற பெயரே எனக்கு போதுமானது – இயக்குநர் வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், இந்தியா என்ற பெயரே போதுமானது என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்தியா என்ற பெயரே எனக்கு போதுமானதாக இருக்கிறது. தேசிய விருதுகள் குறித்து எனக்கு வேறு விதமான கருத்து இருக்கிறது. நாம் ஒரு படத்தை தேர்வுக்கு அனுப்பும் போது தேர்வுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுடன் தான் அனுப்புகிறோம். அந்த தேர்வு குழு சிறந்த தேர்வு குழுவா? இல்லையா? சரியாக தேர்ந்தெடுக்கிறார்களா? என்பது அடுத்தக் கட்டம்.

நான் ஒரு படத்தை அனுப்புகிறேன் என்றால் இந்த தேர்வுக்குழுவின் தீர்ப்பு இறுதியானது என்று ஏற்றுக் கொண்டுதான் அனுப்புகிறோம். பிறகு அந்த படத்திற்கான விருது கிடைக்கிறது இல்லை என்பது அந்த தேர்வுக்குழுவின் முடிவு. ஒரு தேர்வுக்குழுவின் முடிவு நிச்சயமாக ஒரு படத்தின் தரத்தை, அந்த படத்தின் சமூக பங்களிப்பை தீர்மானிப்பது இல்லை. ‘ஜெய்பீம்’ படம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடங்கினார்களோ அதை அந்த படம் செய்துவிட்டது” என்று பேசினார்.