இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலத்தின் முக்கிய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்தும்போது இந்தியா அவற்றை வெற்றிகரகமாக முறியடிக்கிறது. மேலும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல் நடத்துகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான சீனா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதி, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என மிகவும் கடுமையாக சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவை விட சீனா பாகிஸ்தானுக்கு மிகவும் நட்பு நாடாகும். இருந்தபோதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் தாங்கள் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டபோது, வர்த்தம் அளிப்பதாக சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில், எங்களுக்கு தெளிவான ஆதரவு தர சீனா முன் வந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.