இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்க அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவு
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுமார் 1.5 லட்சம் லாரிகள் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.ஐ.டி.எம்.சி. மாநிலத் தலைவர் சி.எல். முகதி கூறியதாவது:-
மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 7.5 லட்சம் லாரிகளை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆபரேஷன் சிந்தூர் குறித்து முழு நாடும் பெருமைப்பட வேண்டும். இதுபோன்ற பதற்றமான காலங்களில் ராணுவத்திற்கு இலவசமாக வழங்க பதிவுசெய்யப்பட்ட லாரிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். எல்லைப் பகுதிகளில் நமது ராணுவம் காட்டிய துணிச்சலால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.