Tamilசெய்திகள்

இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மகத்தான செய்தி – சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தி நியாயத்தை சுப்ரீம் கோர்ட் நிலைநிறுத்தியுள்ளது. ஒருமைப்பாடு, ஜனநாயகக் கொள்கைகளுக்கான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மகத்தான செய்தி. 2024 தேர்தலுக்கு முன் பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு முன் எச்சரிக்கையை அனுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட் என தெரிவித்துள்ளார்.