Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் புள்ளி பட்டியல் – மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் புள்ளிகள் பட்டியலில் மாறிமாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றன.

நேற்றைய இந்தியா- இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. எனினும், ரன்ரேட்டில் இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் 2.032 ஆகும். இந்தியாவின் நெட் ரன்ரேட் 1.405 ஆகும். நியூசிலாந்து 6 போட்டியில் 4-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியா 6-ல் நான்கில் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. நெட் ரன்ரேட் குறைவால் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை விட பின் வரிசையை பெற்றுள்ளது. இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.