Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ரன்களை எடுத்துள்ளது. சட்ரன் 129 ரன்னும்,ரஷித் கான் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ரன்னில் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களை எடுத்து திணறியது.

லபுசேன் 14 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 6 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 3 ரன்னில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருக்கு கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 201 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.