Tamilவிளையாட்டு

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது – 8 வது முறையாக வென்றார் மெஸ்சி

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

மெஸ்சி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார். பெண்களுக்கான பலோன் டி’ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றினார்.