Tamilவிளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களை எடுத்தது.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.இதை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
1. நியூசிலாந்து – 75%

2. இந்தியா – 59.52%

3. ஆஸ்திரேலியா – 55%

4. வங்கதேசம் – 50%

5. பாகிஸ்தான் – 36.6

6. மேற்கிந்திய அணி -33.33 %

7. தென் ஆப்பிரிக்கா – 25.00%

8. இங்கிலாந்து – 21.87%

9. இலங்கை – 00.00