Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2024 – குஜராத் டைடன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது போட்டி முல்லன்புரில் உள்ள பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான புதிய மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா 208 ரன்கள் குவித்தது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை எட்டி வீறுநடை போட்டது. எனினும் 4 ரன்னில் வெற்றி வாய்ப்பை தழுவியது.

4-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக எல்.எஸ்.ஜி. 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

5-வது போட்டி குஜராத் மாநில அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 168 ரன்கள் அடித்தது, மும்பை அணிக்கு கடைசி 5 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்த போதிலும் சேஸிங் செய்ய முடியாமமல் 6 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

6-வது போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியால் ஆர்சிபி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், சொந்த மைதானத்தில் (Home Ground- அணிக்குரிய சொந்த மைதானமாக கருதப்படும் இடம்) விளையாடிய அணிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மைதானம் சிஎஸ்கே-யின் சொந்த மைதானம் (Home Ground) ஆகும். இதனால் “ஹோம் டீம் வின்” டிரெண்ட் இன்றைய போட்டியிலும் தொடர வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதேவேளையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில் கூட குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் மும்பைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் இன்றைய போட்டியிலும் அவர்கள் சிஎஸ்கே அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர் என மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு சேப்பாக்கம் மைதானம் அத்துப்பிடி. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது வென்று என்பது குறிப்பிடத்தக்கது.