Tamilசெய்திகள்

‘ஒரே நாடு, ஒரு தேர்தல்’ குறித்து விவாதிக்க பாராடாளுமன்ற கூட்டுக் குழு இன்று கூடியது!

நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.  ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானம் கடந்த மக்களவை கூட்டத்தொடரின்போது அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘ஒரே நாடு, ஒரு தேர்தல்’ குறித்து விவாதிக்க பாராடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. குழுவின் தலைவர் பிபி சவுத்ரி கூட்டத்திற்காகப் பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்திற்கு வந்தார்.

முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றிய வலைத்தளம் தொடங்கப்பட்டது குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்று குழு விரும்புகிறது” என்றார்.