Tamilசெய்திகள்

குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை – சரத் பவார்

சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு கலகத்தை உண்டாக்கி, நேற்று ஏக் நாத் ஷிண்டேவின் மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

மொத்தம் 53 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் இருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள் தான் என்னும் குறிப்பிட்டுள்ளார். இது சரத் பவாருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

தன்னுடைய சொந்த அண்ணன் மகனே துரோகம் செய்துள்ளார். கட்சியின் நிலை என்ன? என்பது குறித்து அவர் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அஜித் பவார் துரோகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் ”குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை. குடும்பத்திற்குள் அரசியல் குறித்து விவாதிப்பதில்லை. ஒவ்வொருவரும் அவர்களது தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள்” என்றார்.

சரத் பவார் இன்று காலை சுதந்திர போராட்ட வீரரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.பி. சவான் நினைவிடத்திற்கு செல்கிறார். புறப்படும் முன் ”நான் இதுவரை யாரையும் அணுகவில்லை. நேற்றில் இருந்து யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தற்பேது சதாரா செல்கிறேன்” என்றார்.