Tamilசெய்திகள்

சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது – அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது. நம் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். எங்களை குற்றம் சாட்டுவதை விட எதிர்க்கட்சிகள் ஏதும் செய்யவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஏர் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது கூட அரசியல் ஆதாயம் தேடினார்கள். அதேபோல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோதும் அதைத்தான் செய்தார். நாங்கள் 1950-ல் இருந்து 370 சட்டப்பிரிவை நீக்குவோம் என்று சொல்லி வந்தோம்.

அவருடைய ஊழல் வெளிப்பட்ட நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிதானத்தை இழந்துள்ளார். அந்த மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்கள் இந்தியாவில்தான வாழ்ந்து வருகிறார்கள் என்பது அவருக்கு தெரியாது. அவருக்கு கவலை இருந்தால், ஏன் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் மற்றும் ரோகிங்க்யாவிற்கு எதிராக அவர் பேசவில்லை? அவர் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார். அவர் பிரிவினையின் பின்னணியை மறந்து விட்டார். அவர் அகதிகளின் குடும்பத்தை சந்திக்க வேண்டும்.

ஓவைசி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி பொய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல. பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 2019-ல் மசோதா நிறைவேறிய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் கால தாமதம் ஆனது. எதிர்க்கட்சிகள் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். தங்களுடைய வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளா்.