Tamilசெய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ வால் இந்தியாவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!

‘எல் நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பை குறிக்கும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் கால நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதன் அளவு 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கப்படும்.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே சூப்பர் எல் நினோ ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. பொதுவாக எல் நினோ தாக்கம் ஏற்படும்போது இந்தியாவில் வறட்சி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், சூப்பர் எல் நினோவின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.